in ,

ஒலுவில் மக்களால் விரட்டப்பட்ட முன்னாள் முதலமைச்சர்

Nazeer-Ahamed
Nazeer-Ahamed
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹபீஸ் நஸீர் அகமட் தலைமையிலான குழுவினருக்கு ஒலுவிலில் வைத்து மக்கள் தூசன வார்த்தைகளால் திட்டிய சம்பவம்  ஒலுவில் துறைமுக விடுதியில் இடம் பெற்றது.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நிந்தவூர் ஜப்பார் அலியின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டு விட்டு இரவு தூக்கத்திற்காக ஒலுவிலில் அமைந்துள்ள துறைமுக விடுதியில் தங்கியிருந்தார்.
 
இதே வேளை முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நஸீர் அகமட் ஏறாவூரைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களை அழைத்துக் கொண்டு தலைவர் ரவூப் ஹக்கீமை  சந்தித்தார்.
 
தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஹபீஸ் நஸீருக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டுமென ஏறாவூரைச் சேர்ந்தவர்கள் இச்சந்திப்பில் வேண்டிக் கொண்டனர்.
இதைக் கேட்டதும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மிகவும் ஆத்திரத்துடன் எதுவுமே பேசாமல் எழுந்து சென்றுள்ளார்.
 
இச் சந்தர்ப்பத்தில் தலைவரை சூழ்ந்து நின்ற கட்சிப் போராளிகள் முதலமைச்சருக்கும் அவரோடு இணைந்து வந்தவர்களுக்கும் காரசாரமான வார்த்தைப் பிரயோகங்களால் திட்டினர். நிலைகுலைந்த முன்னாள் முதல்வர் ஒட்டம் பிடித்தார்

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6

நேற்று கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்ட பதட்டம் அத்தியட்சகரின் வாக்குறுதியைத் தொடர்ந்து சுமுகநிலைக்கு வந்தது!!!

22405579

கல்முனை கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள்.