in ,

தேசியப்பட்டியலும் கருப்புக் கொடியும்

flag
flag

ஏறாவூரில் இரவோடு இரவாக கட்டப்பட்டுள்ள கருப்புக் கொடிகளும் அதன் பின்புலமும் குறித்து மக்கள் குழப்பமடைவார்கள் என நினைக்க முடியவில்லை. மாகாண சபை பதவிக் காலம் முடிவடைந்த தினத்திலிருந்து தீயில் மிதித்தவன் போல் சிலர் ஓடித் திரிவதனை அவதானிக்கும் போது பதவி மோகம் எந்தளவுக்கு குடி கொண்டுள்ளது என்பதனை அறிய முடிகிறது. 
. ஏறாவூருக்கு இன்றைய தினம் (15:10) SLMC தலைவர் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலி சாஹிர் மெளலானா அவர்களின் அழைப்பின் பேரில், 
SLMC தலைவர் அவர்கள் ஏறாவூருக்கு வருகை தருவது புதிதல்ல ஆகவே இதற்கு முன்னர் கட்டப்படாத கருப்பு கொடிகள் இன்று மட்டும் ஏன் கட்டப்பட்டது. யாரால் கட்டப்பட்டது என்ற தேடலில் தேசியப்பட்டியல் சம்பந்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 
மெளலானா அவர்களை புறக்கணித்து ஏறாவூருக்கு ஜனாதிபதி பிரதமர் காங்கிரஸ் தலைவர் போன்றோர் பங்குபற்றலுடன் ஏற்பாட்டாளர்கள் பல நிகழ்வுகளை நடத்திய போதும் இவ்வாறு கருப்புக் கொடி காணப்பட வில்லை.


ஆனால் மாகாண சபை முடிவடைந்த நிலையில் தேசியப் பட்டியல் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள இந்நாளில் அம்பாறையில் வைத்து தே. பட்டியல் கேட்ட சந்தர்ப்பத்தில் அங்குள்ள போராளிகளால் விரட்டப்பட்ட தகவலுடன் யார் இந்த கருப்பு கொடிக்கு சொந்தம் என்ற கேள்விக்கு விடை இலகுவானது. 


இவைகள் எல்லாம் தே. பட்டியல் கிடைக்காது என்ற ஊகத்தை உண்மைப்படுத்துவதாகவே உள்ளது. இரண்டு பேருக்கு பணம் கொடுத்து இரவோடு இரவாக 100 கருப்புக் கொடிகள் கட்டுவதை விட உண்மையான 10 போராளிகளைக் கொண்டு தலைவர் செல்லும் பாதையில் ஏறாவூருக்கு தே பட்டியல் வேண்டுமென்று பேயாட்டம் நடத்தியிருந்தால் அது உண்மையாக இருந்திருக்கும்.


எது எப்படியோ இதெல்லாம் தலைவருக்கு தெரியாத சுத்து மத்து இல்லை அவரே பெரிய சுத்து மத்து காராள். அத்தோடு தலைவருக்கு ஊரில் இருந்து இன்னுமொரு தலையிடியும் ஆரம்பித்துள்ளது.

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

takes-one-boiled-egg

காலை உணவாக வெறும் 3 முட்டை சாப்பிட்டு பாருங்க! ஏற்படும் அற்புதம் இதோ!

qatar1-1

சவுதி அரேபியாவுக்கு கத்தார் செக்!