in ,

சவுதி அரேபியாவுக்கு கத்தார் செக்!

qatar1-1
qatar1-1

கத்தார் அரசர்   மலேசியா சென்றார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

வளைகுடா சிக்கல் தொடங்கியதில் இருந்து வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைத்துவந்தார் அரசர்   ஷேக்தமிம் பின் ஹமத் அல் தனி.

ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்ற அவர் அதனை தொடர்ந்து மலேசியா சென்றுள்ளார்.

2011ம் ஆண்டில் இருந்து மலேசியா-கத்தார் உறவில் புதிய மலர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இருநாடுகளும் இணைந்து தொழில்வளர்ச்சிக்காக 2பில்லியன் டாலர் தொகுப்பு நிதி ஒதுக்கியுள்ளன.

2022 உலக கோப்பை கால்பந்துக்கான ஏற்பாடுகளை கத்தார் அரசு தீவிரமாக செய்து வருகிறது.

கட்டுமான பணிகளுக்காக சவுதி அரேபியாவில் இருந்து ஸ்டீல் உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம் என்றிருந்தது.

வளைகுடா சிக்கலால் தற்போது ஸ்டீலுக்கு பதில் மரம் உபயோகப்படுத்தும் முடிவுக்கு வந்துள்ளது.

இதற்காக 15 மலேசிய நிறுவனங்கள் தயாராக உள்ளன.

இதனைத்தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் 3பில்லியன் டாலராக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால்  உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடக்க எதிர்ப்பு தெரிவிக்கும் சவுதி அரசின் நடவடிக்கைக்கு செக் வைத்துள்ளார் அரசர் ஷேக் தமிம்.

இரு நாடுகளுக்கும் இடையேயான தொழில்சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இந்நிகழ்ச்சியில் கத்தார் அரசர் மற்றும் மலேசிய பிரதமர் முகமது நஜீப் முன்னிலை வகித்தனர்

தொழில்துறை, கல்வித்துறை, நீதித்துறையில் இருநாடுகளும் பரஸ்பரம் பயன்பெறும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

flag

தேசியப்பட்டியலும் கருப்புக் கொடியும்